Tuesday, April 8, 2008

புது வெள்ளை மழை - ரோஜா

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதி நீர்..நீயானால்..கரை நானே..
சிறு பறவை..நீயானால்..உன் வானம் நானே..
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே
கொடிதான் பூ பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை
உன் காதோடு யார் சொன்னது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

நீ அனைக்கின்ற வேளையில்
உயிர்ப் பூ வெடுக்கென்று மலரும்
நீ பருகாத போதிலே
உயிர்ப் பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை
உன் கண்கள் பந்தாடுதோ..
மலர் மஞ்சம் காணாத வெண்னிலா
என் மார்போடு வந்தாடுதோ..

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதி நீர்..நீயானால்..கரை நானே..
சிறு பறவை..நீயானால்..உன் வானம் நானே..

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

No comments: