Thursday, March 20, 2008

கனா காணூம் காலங்கள் - 7G Rainbow Colony

கனா காணூம் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கரையாத கோலாம் போடுமோ
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ...
இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகள் இன்னொரு நரகம்
இளமையின் அதிசயம்..
இதழ் கத்தியில் நடந்திடும் பருவம்

தினம் கணவினில் அவரவர் உருவம்
சுடும் நெருப்பினில் விரல்களும் விரும்பும்
கடவுளின் ரகசியம்...
உலகில் மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டும் பேசிடும் பாஷை
மெதுவாய் இனி மழை வரும் ஓசை
ஆ... கனா காணூம் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கரையாத கோலாம் போடுமோ
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ...

நனையாத காலுக்கெல்லாம்
கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறென்றால்
நட்பு என்று பெயரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம்
பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம்
களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள்..
எதைத்தேடி போகிறதோ
திரி தூண்டிப் போன
விரல் தேடி அலைகிறதோ
தாயோடும் சிறு வேற்றுமை இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
காவிகள் பேசிட விருப்பங்கள் முடிக்கும்
தடுத்திடவே இங்கு வழியில்லையே..

ஆ..... கனா காணூம் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கரையாத கோலாம் போடுமோ
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ...

இது என்ன காற்றில் இன்று
ஈரப்பதம் குறைகின்றதே
ஏகாந்தம் பூசிக்கொண்டு
அந்தி வேளை அழைக்கிறதே..
அதிகாலை நேரம் எல்லாம்
தூங்காமல் விடிகிறதே
விழி மூடி தனக்குள் பேசும்
மெளனங்கள் பிடிக்கிறதே..
நடை பாதை கடையில்
உன் பெயர் படித்தால்..
நெஞ்சுக்குள் ஏனோ
மயக்கங்கள் பிறக்கும்
அடப் படமாய் சில தோகங்கள் தோன்றும்
பனித்துளியாய் அது மறைவது ஏன்
நிலநடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மன நடுக்கம் அது மிகக்கொடுமை..

ஆ... கனா காணூம் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கரையாத கோலாம் போடுமோ
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ...

பெண் ஆண் பொது

No comments: