Tuesday, August 12, 2008

கத்தாழக் கண்ணால- அஞ்சாதே

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை
கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை

இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை
கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
கூந்தல் கூரையில் குடிசையை போட்டு

கண்கள் ஜன்னலில் கதவினை பூட்டு
கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு
கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை

இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை

கலகலவென ஆடும் லோலாக்கு நீ
பளபளவென பூத்த மேலாக்கு நீ
தள தளவென இருக்கும் பல்லாக்கு நீ
வளவலவென பேசும் புல்லாக்கு நீ
ஐயாவே ஐயாவே அழகிய பாருங்க
அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க
வெண்ணிலா சொந்தகரிங்க...
கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை

இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை

கருகருவென கூந்தல் கை வீசுதே
துருதுருவென கண்கள் வாய் பேசுதே
பளபளவென பற்கள் கண் கூசுதே
பகல் இரவுகள் என்னை பந்தாடுதே
உன்னோட கண் ஜடா இலவச மின்சாரம்
ஆண் கோழி நான் தூங்க நீ தானே பஞ்சாரம்
உன் மூச்சு காதல் ரீங்காரம் ...

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை

கண்கள் இரண்டால்- சுப்பிரமணியபுரம்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதேனே
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய் -2

பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் ...
பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன் ...
நகர்வேன் எனை மாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே இதில்
ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதேனே
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை
தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைத்தாய்

கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போதோ நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உறவும் கொள்ளாத
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்
உன்னை இன்றி வேறொரு நினைவில்லை

இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலும் உன்னோடு வாழ

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன்
நகர்வேன் எனை மாற்றி

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதேனே
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை
தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்

ஆண் - பெண்

Tuesday, April 8, 2008

புது வெள்ளை மழை - ரோஜா

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதி நீர்..நீயானால்..கரை நானே..
சிறு பறவை..நீயானால்..உன் வானம் நானே..
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே
கொடிதான் பூ பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை
உன் காதோடு யார் சொன்னது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

நீ அனைக்கின்ற வேளையில்
உயிர்ப் பூ வெடுக்கென்று மலரும்
நீ பருகாத போதிலே
உயிர்ப் பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை
உன் கண்கள் பந்தாடுதோ..
மலர் மஞ்சம் காணாத வெண்னிலா
என் மார்போடு வந்தாடுதோ..

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதி நீர்..நீயானால்..கரை நானே..
சிறு பறவை..நீயானால்..உன் வானம் நானே..

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

Monday, April 7, 2008

என்னவளே அடி என்னவளே - காதலன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடிவந்தேன்...
காதலென்றால் பெரும் அவஸ்த்தையென்று
உன்னை கண்டதும் கண்டுகொன்டேன்
இன்று கலுத்து வரை எந்தன் காதல் வந்து
இரு கண் விழி பிதுங்கி நின்றேன்...

வாய் மொழியும் எந்தன் தாய் மொழியும்
இன்று வசப்படவில்லையடி..
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
உருவமில்லாதொரு உருண்டையும் உருளுதடி...
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி..
கண்களெல்லாம் என்னைப் பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி..
இது சொர்க்கமா..நரகமா...சொல்லடி உள்ளபடி..
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி...

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்

கோகிலமே நீ குரல் கொடுத்தால்
உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன்..
கோபுரமே உன்னை சாய்த்துகொண்டு
உந்தன் கூந்தலில் மீண் பிடிப்பேன்..
வெண்ணிலவே உன்னை தூங்கவைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்..
வருடவரும் பூங்காற்றை எல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்...
என் காதலின்..தேவையை..காதுக்குள் ஓதிவைப்பேன்...
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்...

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடிவந்தேன்..
காதலென்றால் பெரும் அவஸ்த்தையென்று
உன்னை கண்டதும் கண்டுகொன்டேன்
இன்று கலுத்து வரை எந்தன் காதல் வந்து
இரு கண் விழி பிதுங்கி நின்றேன்...

Thursday, March 20, 2008

கனா காணூம் காலங்கள் - 7G Rainbow Colony

கனா காணூம் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கரையாத கோலாம் போடுமோ
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ...
இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகள் இன்னொரு நரகம்
இளமையின் அதிசயம்..
இதழ் கத்தியில் நடந்திடும் பருவம்

தினம் கணவினில் அவரவர் உருவம்
சுடும் நெருப்பினில் விரல்களும் விரும்பும்
கடவுளின் ரகசியம்...
உலகில் மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டும் பேசிடும் பாஷை
மெதுவாய் இனி மழை வரும் ஓசை
ஆ... கனா காணூம் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கரையாத கோலாம் போடுமோ
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ...

நனையாத காலுக்கெல்லாம்
கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறென்றால்
நட்பு என்று பெயரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம்
பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம்
களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள்..
எதைத்தேடி போகிறதோ
திரி தூண்டிப் போன
விரல் தேடி அலைகிறதோ
தாயோடும் சிறு வேற்றுமை இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
காவிகள் பேசிட விருப்பங்கள் முடிக்கும்
தடுத்திடவே இங்கு வழியில்லையே..

ஆ..... கனா காணூம் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கரையாத கோலாம் போடுமோ
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ...

இது என்ன காற்றில் இன்று
ஈரப்பதம் குறைகின்றதே
ஏகாந்தம் பூசிக்கொண்டு
அந்தி வேளை அழைக்கிறதே..
அதிகாலை நேரம் எல்லாம்
தூங்காமல் விடிகிறதே
விழி மூடி தனக்குள் பேசும்
மெளனங்கள் பிடிக்கிறதே..
நடை பாதை கடையில்
உன் பெயர் படித்தால்..
நெஞ்சுக்குள் ஏனோ
மயக்கங்கள் பிறக்கும்
அடப் படமாய் சில தோகங்கள் தோன்றும்
பனித்துளியாய் அது மறைவது ஏன்
நிலநடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மன நடுக்கம் அது மிகக்கொடுமை..

ஆ... கனா காணூம் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கரையாத கோலாம் போடுமோ
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ...

பெண் ஆண் பொது

வண்ணம் கொண்ட வெண்ணிலவே - SPB

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ..- 2
விண்ணிலே பாதை இல்லை
விண்ணைத்தொட ஏனி இல்லை - 2
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே

பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
ஸ்வாசிக்க ஆசை இல்லை..-2
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை..
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதும் இல்லை..
தள்ளித்தள்ளி நீ நடந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை...
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே

நந்தை உந்தன் கூந்தலுக்கு
நச்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நச்சத்திரம் வாடுதடி...- ௨
கண்ணி உன்னை பார்த்திருப்பேன்
கால் தடுக்க காத்திருப்பேன்..
ஜீவன் வந்து சேரும் வரை
தேகம் போல் நான் கிடப்பேன்..
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்...

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ..- ௨
விண்ணிலே பாதை இல்லை
விண்ணைத்தொட ஏனி இல்லை - ௨
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே

முதன் முதலில் பார்த்தேன் - Harigaran

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே..
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை..- 2
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா...
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே

நந்தவனம் இதோ இங்கே தான்

நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால் தான்

நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
நொடிக்கொரு தரம் உனை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என் உடல் சிலிர்க்கவைத்தாய்..-2
முதல் பார்வை நெஞ்சில் என்றும்

உயிர் வாழுமே...உயிர் வாழுமே..
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே

உத்தரவே இன்றி உள்ளே வா

நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்
அந்த நொடி அன்பே என் ஜீவன்

வேரெங்கு போனது பாரடி உன்னில்..
உன்னை கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்..
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்...-2
என் ஸ்வாசக் காற்றில் எல்லாம்

உன் நியாபகம்.. உன் நியாபகம்

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே..
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை..-2
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா...
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே..

ராகங்கள் பதினாறு - SPB

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா... - 3
பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட.. சுகமானது... - 2
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா...

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை..
கனிவான ஸ்வரம் பாட பதமானது... - 2
அழகான இளம் பெண்னின் மேனி தான் கூட
ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா...-2

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா...

இடையாட வலையாட சலங்கைகள் ஆட..
இடையோடு கொடி போல நடமாடினால்...-2
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்..
ஆனந்தம் குடிகொண்ட கோலமம்மா...-2

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா... -2
பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட.. சுகமானது... -2
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா...

வெள்ளைப் புறா - K.J.Jesudas

வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
முதழெழுத்து தாய் மொழியில்
தலையெழுத்து யார் மொழியில்
என் வாழ்க்கை வான் வெளியில்..ஓ...
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே

பாதச்சுவடு தேடி தேடி கால்கள் ஓய்ந்து போனதே..
நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழை ஆனதே..
தலைவிதி எனும் வார்த்தை இன்று
கவலைக்கு மருந்தானதே...
வேதங்களே வாழும் வரை சோகங்களே காதல் கதை...
கார்கால மலர்களும் என்னோடு தல்லாடும்..

வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
முதழெழுத்து தாய் மொழியில்
தலையெழுத்து யார் மொழியில்
என் வாழ்க்கை வான் வெளியில்..ஓ...
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே

நீயும் நானும் சேர்ந்த போது கோடை கூட மார்கழி...
பிரிந்த பின்பு கூவும் என்னை சுடுவதென்ன காதலி...
துடுப்பிழந்ததும் காதல் ஓடம்
திசை மறந்தது பைங்கிளி..
போகும் வழி நூறானதே... கண்ணீரினால் சேரானதே..
இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம்..

வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
முதழெழுத்து தாய் மொழியில்
தலையெழுத்து யார் மொழியில்
என் வாழ்க்கை வான் வெளியில்..ஓ...
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே.